பர்கூர் ஒன்றியத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை!!
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மு. தம்பிதுரை துவக்கி வைத்தார்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கந்திகுப்பம் ஊராட்சி காமராஜ் நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜசபா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்நோக்கு கட்டிடம் அமைக்க ரூ.7 இலட்சம் மதிப்பீட்டிலும் பாலேப்பள்ளி ஊராட்சி எலத்தகிரி பாஞ்சாலி நகரில் பல்நோக்கு கட்டிடம் அமைக்க ரூ.7 இலட்சம் மதிப்பீட்டிலும்
அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும் முன்னாள் துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எஸ் எம் மாதையன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தூயமணி, மாணவரணி வெற்றிச்செல்வன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெருமாள், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கார்த்திக், முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெசிந்தா வில்லியம் உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் ஊர்பொதுமக்கள் திரலாக கலந்து கொண்டனர்.