மோடி பிறந்த நாளை
சேவை மாதமாக கொண்டாட புதுச்சேரி பாஜக முடிவு

மாநிலத் தலைவர் சாமிநாதன் தகவல்

(வி தங்கப்பிரகாசம் செய்தியாளர் ,புதுச்சேரி)

புதுச்சேரி
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை புதுச்சேரி மாநில பாஜக சார்பில் சேவை மாதமாக கொண்டாடவுள்ளதாக மாநிலத்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுவை மாநில பாஜக தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும், வறுமையும்தான் நாட்டில் மலிந்திருந்தது. ஆனால் இன்று பிரதமராக பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு நாடு பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி உலகளவில் நாட்டின் பெருமையை பிரதமர் பறைசாற்றியுள்ளார்.


இதற்காக பிரதமருக்கு எங்கள் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். புதுவை மாநில பாஜக சார்பில் பாராட்டு கடிதம் பிரதமருக்கு அனுப்பியுள்ளோம். நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை செப்டம்பர் 17ந் தேதி முதல் அக்டோபர் 2ந் தேதி வரை சேவை மாதமாக கொண்டாட உள்ளோம்.
பிறந்தநாளையொட்டி தொகுதி தோறும் மருத்துவ முகாம்களை ந டத்துகிறோம்.

மரக்கன்றுகள் நடுகிறோம். வரும் திங்கள் கிழமை ஒரே நாளில் நாடு முழுவதும் அதிகளவில் ரத்ததானம் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. புதுவை மாநில பாஜக சார்பில் ஜிப்மரில் இளைஞர்கள் ரத்ததானம் செய்கின்றனர்.
ஆயுஷ்மான் திட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் புதுவையில் இணைந்துள்ளனர்.

விடுபட்டவர்களையும் இத்திட்டத்தின் கீழ் இணைக்க உள்ளோம். இதற்காக தொகுதிதோறும் முகாம்கள் நடத்தப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய கியாஸ் இணைப்புகளை நாடு முழுவதும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதுவையில் 15 ஆயிரம் பேர் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்படுவார்கள். இதற்காக தொகுதிதோறும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அக்டோபர் 2ம் தேதி காவி பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அன்றைய தினம் பாஜகவினர் காவி ஆடைகள் அணிந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டும்விதமாக தொகுதிதோறும் வினாடி வினா போட்டிகள் நடத்த உள்ளோம்.

பாஜக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உறுப்புதானத்தை வலியுறுத்த உள்ளோம். முடநீக்கு உபகரணங்களையும் வழங்க உள்ளோம்.
நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இதற்காக புதுவை பல்கலைக்கழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும். இந்த சட்டத்தை இயற்றி புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதுவையில் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க அனைத்து அரசியல்கட்சிகளும் இணைந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

எனவும் மத்திய பல்கலைக்கழகம் முழுக்க ஒரே வித நடைமுறைப்பின்படுத்தப்படும் என்கின்றனர். அதே நேரத்தில் புதுச்சேரியில் ஒரெயாரு பல்கலைக்கழகம் உள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க அனைத்து வித நடவடிக்கையும் எடுப்போம்.

ஊழலுக்கு எதிரானது பாஜக. ஏழை மக்களுக்கு விநியோகிக்கும் மருந்து விநியோகத்தில் முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். என்றும் குறிப்பிட்டார்.
அப்போது உடன் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பாஜக மாநில துணைத்தலைவர் தங்க விக்கிரமன் ஊடகப்பிரிவு மாநில அமைப்பாளர் குருசங்கரன் கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் வெற்றிச்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *