தென்காசி மாவட்டம்
கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணா வின் 115 -வது பிறந்த நாளை முன்னிட்டு கடையம் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பிரதிநிதிகள் பெருமாள்,யாகூப்,மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர் மைதீன், அவைத் தலைவர் பக்கீர் மைதீன், சுரேஷ் ,சசிகுமார், சுந்தரம் ,புகாரி மீரா ஷாகிப் ,யானை மீரான்,முத்து ,ஒன்றிய துணைச் செயலாளர்கள் வின்சென்ட், முல்லையப்பன்,மகேஷ் பாண்டியன், தர்மபுரமடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜன்னத் சதாம் உசேன் ,அர்ஜுனன், சதீஷ்குமார், கோபி, முருகன் ,செல்வம்,ஒன்றிய கவுன்சிலர்கள் ஜகாங்கீர், சுந்தரி மாரியப்பன்,மோகன் பாரதி சுரேஷ், தகவல் தொழில் நுட்ப அணி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டதை எடுத்து திமுகவின் சாதனையை ஆட்டோவில் ஒளிபரப்பி துண்டு பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.