எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி ரயில் நிலையம் முன்பாக காவிரியில் உரிய தண்ணீரை பெற்று தராத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காவிரி டெல்டா விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையம் முன்பாக காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தராத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காவிரி டெல்டா விவசாயிகள் மாவட்டத் தலைவர் வைத்தியநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர வலியுறுத்தியும் தமிழக அரசு ராசி மணலில் புதிய தடுப்பணை அமைக்க கோரியும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர் மேலும் கருகிப்போன குருவை சாகுபடி மற்றும் சம்பா சாகுபடிகளுக்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசு மற்றும் கர்நாடக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
முன்னதாக ரயில் மறியலில் ஈடுபட வந்த விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதனை அடுத்து ரயில் மறியளை கைவிட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்