பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி நிதியமைச்சருடன் பாபநாசம் எம்எல்ஏ சந்திப்பு ….
தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் தஞ்சாவூர் – அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில், பாபநாசம் வட்டம் மேட்டுத் தெரு – அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் ஆகிய கிராமங்கள் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைத்தல் மற்றும் அய்யம்பேட்டை பேரூராட்சியில் பொதுமக்கள் நலன் கருதி பேருந்து நிலையம் அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய கோரி தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.