இரா.மோகன்.தரங்கம்பாடி, செய்தியாளர்.
தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.மகாபாரதி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆறுபாதி, பரசலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆறுபாதி; ஊராட்சியில் விளநகர் உட்கிராம பகுதியில்;, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ராஜேந்திரன் வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்கள் ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு பணியின் தரத்தினை ஆய்வு செய்தார்.
மேலும், இதுவரை இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பணிகளின் விவரங்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து, ஆறுபாதி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் ஈமகிரி மண்டபம் கட்டப்பட்டு வருவதையும், பரசலூர் ஊராட்சியில் கல்யாணசுந்தரம் நகரில் ரூ.4 இலட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் 61 மீ நீளத்திற்கு சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், பரசலூர் ஊராட்சியில் நக்கீரன் தெருவில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 21 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பொறையார் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார். ஆய்வகம், ஆண்கள் மருத்துவ பிரிவு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை மையம், மருந்தகம், காய்ச்சல் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, நுண்கதிர் பிரிவு போன்றவைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் தினசரி சிகிச்சை பெறும் புற நோயாளிகள் பதிவேடு, வருகை பதிவேடு, மருந்துகள் இருப்பு பதிவேடு உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின்போது, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.