மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், பொறையார் TBML கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் குழுவின் உற்பத்தி பொருட்களை கொண்ட கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அவர்கள் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், பொறையார் TBML கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் குழுவின் உற்பத்தி பொருட்களை கொண்ட கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதிஅவர்கள் தொடங்கி வைத்து, உற்பத்தி பொருட்களின் விற்பனையாளர்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசானது, மகளிர் குழுவின் உற்பத்தி பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையவே இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மகளிர் உற்பத்தி பொருட்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கல்லூரி சந்தை நிகழ்ச்சியில், மகளிர் குழு உற்பத்தி பொருட்களின் விற்பனையாளர்கள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்குகளில், அமைக்கபட்டுள்ள உற்பத்தி பொருட்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. இதுபோன்று தொடர்;ந்து,
மகளிர் திட்டம் மூலம் உற்பத்தி பொருட்களின் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, மகளிர் உதவி திட்ட அலுவலர் மனுநீதி சோழன், கல்லூரி முதல்வர் முனைவர் ஜான்சன் ஜெயக்குமார், வட்டாட்சியர் தரங்கம்பாடி சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.