அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சங்கம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியாவிலேயே முதன் முறையாக பொதுமக்களுக்கு அன்பளிப்பாக களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் வழங்கும் நிகழ்வு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதே போல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம் உடையம் பாளையம் ஶ்ரீ திங்களுர் மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் பொது மக்களுக்கு அன்பளிப்பாக களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டது.

விநாயகர் சிலைகளை பெற்று கொண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியோடு சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அருள்ஜோதி தபோவனம் சிவபுரம் திரு. ஸ்ரீலஸ்ரீ மூர்த்திலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் சங்கத்தின் மாநில செயலாளர் உயர்திரு.மோகன்ராஜ் ஜி ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு விநாயகர் சிலைகளை வழங்கினார்கள். கொண்டார்.
இந்த விழா ஏற்பாட்டை சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனையின் படி மாநில மகளிரணி துணை செயலாளர் திருமதி.மங்கையர்கரசி மற்றும் மாவட்டமகளிரணி துணை செயலாளர் திருமதி.விசாலாட்சி அவர்களும் சிறப்பாக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் திரு.பாலமுரளி ஜி , மகேஷ்வரன் ஜி ஆகியோர் கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர்.