மரம் தங்கசாமி ஐயா நினைவு நாளான
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள 100 விவசாய நிலங்களில், 605 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1,68,239 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் விவசாயியான துரை அவர்களது தோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை பஞ்சாயத்து தலைவர் மகேந்திரன் மரக்கன்றுகளை நடவு செய்து தொடங்கி வைத்தார்
மரம் தங்கசாமி ஐயா, “வாழ்வோம் மரங்களுடன்” என்ற தாரக மந்திரத்துடன் டிம்பர் மர சாகுபடியை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தியவர். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளிடம் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து மாவட்டத்தையே பசுமையாக மாற்றியவர். விவசாயிகளில் வறுமையைப் போக்க டிம்பர் மரங்கள் சாகுபடியே சரியான தீர்வு என தனது வாழ்நாள் முழுவதும் செயல் பட்டவர். காவேரி கூக்குரலின் தொடக்ககால இயக்கமான பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து செயல் புரிந்தவர்.
ஈஷா இதுவரை 8.85 கோடி மரங்கள் வினியோகித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 1,01,42,331 மரங்கள் நடப்பட்டுள்ளது, இந்த ஆண்டு தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 37,83,098 மரங்கள் நடப்பட்டுள்ளது. மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளை காவேரி கூக்குரல் ஊக்குவித்து வருகிறது.
தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற விலைமதிப்பு மிக்க டிம்பர் மரங்களை விவசாய நிலங்களில் வளர்பதன் மூலம் விவசாயிகளின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும். நீண்ட கால மரங்களுக்கிடையே ஊடுபயிர் செய்து அதன் மூலம் நல்ல வருமானமும் பெறலாம். சமவெளியில் வளரக்கூடிய கரிமுண்டா ரக மிளகு சாகுபடி மூலம் எண்ணற்ற விவசாயிகள் தொடர் வருமானம் பெற்று வருகின்றனர்.
விவசாயிகளுக்கு தொழில்நுட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக காவேரி கூக்குரல் சார்பாக தமிழம் முழுவதும் களப்பணியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று, மண்ணுக்கேற்ற மரங்களைத் தேர்ந்தெடுத்தல், மரநடவு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்த ஆலோசனைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றார்கள். மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்த கருத்தரங்குகள், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற் கொள்ளப்படுகிறது.
அடுத்து வரும் 12 ஆண்டுகளில் தமிழக மற்றும் கர்நாடக விவசாயிகளின் ஒத்துழைப்போடு 242 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 50 ஈஷா நர்சரிகளில் விவசாயிகளுக்காக குறைந்த விலையில் வெறும் 3 ரூபாய்க்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்படுகிறது. மேலும் வரும் மழைக்காலத்திற்கு தேவையான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகத்திற்கு தயாராக உள்ளது.
மேலும், வரும் அக்டோபர் 15ந் தேதி “கோடிகளை கொடுக்கும் சந்தனம்” என்ற மரவளர்ப்பு குறித்த கருத்தரங்கை பல்லடத்தில் உள்ள சந்தன பண்ணையில் காவேரி கூக்குரல் ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த முன்னோடி விவசாயிகளும், விஞ்ஞானிகளும் பங்கேற்று சந்தனம் மற்றும் மானாவாரி மரவளர்ப்பு குறித்து விளக்க உள்ளார்கள். இப்பயிற்சியில் பெரும்பாலான விவசாயிகள் பங்கேற்று பலன்பெற கேட்டுக்கொள்கிறோம். பயிற்சியில் பங்கேற்க 94425 90079, 94425 90081 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். கூடுதல் தகவல்களுக்கு 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.