திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோரியும் அரசு அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றிட கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றன..
போராட்டத்தின் தலைமையாக தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் பூமிநாதன், துருவன்ராசு முன்னிலையாக சட்டமன்ற தொகுதி செயலாளர் குமாரசாமி, துரை.முத்தரசு வரவேற்புரையாக மாவட்ட பொருளாளர் திருமாறன்
மாவட்ட துணை செயலாளர் பாவேந்தன் பைஜூநாடார்,
மாவட்ட செய்தி தொடர்பாளர்
பொதினிவளவன், தொகுதி துணை செயலாளர் போர் கொடியேந்தி மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக முதன்மைச் செயலாளர் ஏ.சி.பாவரசுதுணை பொது செயலாளர் கனியமுதன்,மண்டல செயலாளர் தமிழ்வாணன்,ஜலால் முகமது,மாவட்ட செயலாளர்கள்
திருவளவன், சதீஸ்குமார், ஒன்றிய செயலாளர்களான ஜெய்சீலன், ஜீவானந்தம்ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு குழு ஆதிவளவன்,கோதை.முத்துக்குமார், இனியவன், கிள்ளிவளவன், பெருமாள், மருதமுத்து, இந்தியகுமார், மகுடீஸ்வரன்,காட்டப்பன்,செந்தமிழ்வளவன்,சின்னமாயவன்,காத்தசாமி,கார்த்திக்ராஜா, அசோக்குமார், கவியரசன், மகாமுனி, மணவாளன்,வாய்க்கால்சாமி,தமிழண்ணன், வேலுச்சாமி, இன்பராஜ், ராஜாவளவன்,மதுரைவீரன், இளமதி என்ற பிரபு, பாவலன்,செல்லத்துரை,பிரகாஷ்,காட்டான்துரை, வடிவேலு, உமாராணி, வழக்கறிஞர் ஜெயக்குமார்,மில்லர் மண்டேலா, வள்ளிதயாளன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் சாதிய பாகுபாடு தலைதூக்கி காணப்பட்டு வருவதாகவும்
தொடர்ந்து தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை,
குடிநீர் பைப்பில் இரண்டு குடிநீர் பைப்புகள், கோயிலுக்குள் நுழைவு மறுப்பு உள்ளிட்ட பல்வேறு தீண்டாமைகள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் காணப்பட்டு வருவதாகவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கண்டு கொள்வதில்லை என்றும் சாதிய வன்முறை அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியை தீண்டாமை மிகுந்த தொகுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றன.
மேலும் திமுக கூட்டணியில் அங்கமாக செயல்பட்டு வரும் விசிக்காவை உணவுத்துறை அமைச்சர் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதியில் அரசு வேலைகளில் பட்டியலின மக்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்றும்
தொடர்ந்து கிராமங்களில் சேரி மற்றும் காலனி பகுதிகளை தனியாக ஒதுக்கி வைத்து தீண்டாமை பார்வை பார்த்து வருவதாகவும் நிர்வாகிகள் குற்றம் சாட்டி பல்வேறு கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன