தென்காசி மாவட்டம்
நெட்டூர் வட்டாரம், ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட, மேலமருதப்பபுரம் கிராமம் சண்முகாபுரமத்தில்,சுகாதார துறை துணை இயக்குனர் மருத்துவர் முரளிதரன் அவரது அறிவுறுத்தலின் கீழ்
வட்டார மருத்துவ அலுவலர், ஆறுமுகம் தலைமையில்
,மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் கீழ், புகையிலை இல்லாத கிராமம் விழிப்பு ணர்வு கூட்டம் நடைபெற்றது.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர், கெங்காதரன் முன்னிலை வகித்தார் மேலமருதப்பபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் பாரதிராஜா வரவேற்புரை வழங்கினார்
கூட்டத்தில், புகையிலை பொருள்கள் ஒழிப்பின் முக்கியத்துவம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நலக் கல்வி பொது மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நிகழ்வில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் முடிவில் சுகாதார ஆய்வாளர், கணேசன் நன்றியுரை வழங்கினார் .