கோவையில் தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கத்தின் 17 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது…
தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கத்தின் 17 வது பொதுக்குழு கூட்டம் கோவைபுதூரில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.
மாநில தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்..
இதில் புதிய நிர்வாகிகளாக,மாநில தலைவர்:ஆர்.கிருஷ்ணசாமி, மாநில செயல் தலைவர் உதகை செங்குட்டுவன், மாநில பொதுச்செயலாளர்: வீரன் முத்துசாமி,மாநில பொருளாளர்: வி. கந்தசாமி,மாநில துணை தலைவர்: அ. ஆண்டி, மாநில துணை தலைவர் : வி. புஷ்பராஜ், மாநில துணை தலைவர் எம். மாதையன், தருமபுரி மாநில செயலாளர்கள்:சி. கேசவமூர்த்தி, அன்பழகன், மாநில இளைஞரணி செயலாளர் கௌதம் செங்குட்டுவன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜெயபிரகாஷ், மாநில செய்தி தொடர்பாளர் கந்தவேல்,ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் கிருஷ்ணசாமி,வரும் பிப்ரவரி மாதம் சென்னையில் மாபெரும் கோரிக்கை மாநாடு நடத்த உள்ளதாகவும்,மாநாட்டிற்கு தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக கூறிய அவர்,இதில் குரும்பர் இன மக்களின் பல்வேறு கோரிக்கைகளை எடுத்து கூற உள்ளதாக கூறினார்..
பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானங்களாக,ஏற்கனவே பழங்குடியினர் பட்டியலில் குரும்பாஸ் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் என்ற பகுதி கட்டுப்பாட்டை நீக்கி தமிழ்நாடு முழுவதும் என திருத்தம் செய்யவும், குரும்பாஸ் உடன் குரும்பா குரும்பன் குரும்பர் ஆகிய இணைச்சொற்களை சேர்க்க உரிய பரிந்துரை செய்யவேண்டும்,குருமன்ஸ் என ஆங்கிலத்தில் பழங்குடி இனச்சான்றிதழ் வழங்கும்போது தமிழில் ‘குருமன்கள்’ என தவறாக குறிப்பிடப்படுவதை ‘குரும்பர்’ என்று வழங்கவேண்டும்,பழங்குடியினர் நல வாரியம் மற்றும் ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைத்து, அதன் பொறுப்புகளுக்கு குரும்பர் சமுதாய மக்களை நியமனம் செய்திட வேண்டும், தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் குரும்பர் சமுதாயத்தை சேர்ந்தவரை நியமனம் செய்திட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில,மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்…