செய்தி: சத்தியமூர்த்தி மேட்டுப்பாளையம்.
மேட்டுப்பாளையம் தமிழ் சங்கத்தின் ஐம்பதாவது பொதுக்குழு கூட்டம் தமிழ் சங்க அறக்கட்டளை கலையரங்கத்தில் நடைபெற்றது.மேட்டுப்பாளையத்தில் தமிழ் சங்கம் கடந்த 1963 ஆம் ஆண்டு துவங்கி நடைபெற்று வருகிறது.
சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் வி.ஆர்.தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.சங்கத்தின் செயலாளர் அரங்கசாமி முன்னிலை வகித்தார், வெங்கடாசலம் வரவேற்புரை ஆற்றினார் சங்கத்தின் ஆண்டு அறிக்கையை செயலாளர் அரங்கசாமி வாசித்தார்.
சங்கத்தின் வரவு செலவு கணக்குகளைபொருளாளர்கீ. து. ச.சோலைமலை வாசித்தார்.தலைவர் தாமோதரன் உரையாற்றும் பொழுது தமிழ் சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான ஆரம்பப் பள்ளி பருவத்திலிருந்தே தாய் மொழியாம் தமிழ் மொழி வழியில் கற்பித்தலை ஊக்குவிக்கும் விதமாக அங்கன்வாடி மையங்கள்,ஆரம்ப பள்ளிகள், பால் வாடிகளுக்கு நேரடியாக சென்று சிலேட்டுகள், எழுது பொருட்கள் சார்ட்டுகள், வரைபட புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள், ஆகியவற்றை சங்கத்தின் சார்பாக மாணவர்களுக்கு
கடந்த ஆண்டு இலவசமாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார்,மேலும் வரும் ஆண்டுகளிலும் இதே போல் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார் நிறைவாக முருகநாதன் நன்றி தெரிவித்தார்.