தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார்
நிர்வாகிகள் பிரபு சுந்தரவடிவேல் வேலு கார்த்திக் ஜோதிமணி பாஸ்கர் மலர்கொடி அருள்மொழி முருகன் சௌந்தரராஜன் ஆகியோர் முன்னில வைத்தனர்
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் அறவாழி மாநில பொருளாளர் ஜோதி கலந்து கொண்டு தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கத்தின் பற்றியும் உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கை களுக்காக போராடுவது பற்றி விளக்கிப் பேசினார்
தமிழ்நாடு ஜென்ரல் எம்ப்ளாயீஸ் யூனியன் மாநில பொதுச் செயலாளர் தோழர் கலியமூர்த்தி அனைவருக்கும் வாழ்த்துரை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊராட்சி பணியாளர் சங்க ஆலோசகர் செல்வநாதன் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் மாட்டுவண்டி தொழிலாளர் ஐக்கிய சங்கம் தமிழரசன் சாலையோர வியாபார தொழிலாளர் சங்கம் தனசேகர் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் ராஜா மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர் சங்கம் ஞானவேல் உழைக்கும் பெண்கள் ஐக்கிய சங்கம் பழனியம்மாள் கட்டுமான தொழிலாளர் ஐக்கிய சங்கம் விநாயகமூர்த்தி புரட்சிகர சோசியல் கட்சியின் காட்டுமன்னார்கோவில் வட்ட செயலாளர் மசாஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கூட்டத்தின் தீர்மானமாக அரசாணை நிலை எண் 385 நீதித்துறை நாள்1 .10 .2010 மற்றும் அரசாணை 39 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை நாள் 7/5/2013 படி தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணி முடித்ததின் அடிப்படையில் சிறப்பு காலமறை ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்ய அரசாணை 14 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் படி ஆணை இதுவரை அமல்படுத்தவில்லை ஊதியம் நிர்ணயம் செய்து நிலவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும்
அடிமை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் 26 ஆயிரம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
காட்டுமன்னார்கோயில் சுப்பையன் நன்றி கூறினார்.