கோவையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் பாடிய பாடல்களை தொடர்ந்து பனிரெண்டு மணி நேரம் பாடி அசத்திய இசை ஆர்வலர்கள்…
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர் . எஸ் பி பாலசுப்ரமணியம்..அவர் மறைந்து மூன்று ஆண்டுகளாகிய நிலையில்,அவரை நினைவு கூறும் விதமாக அவர் பாடிய பாடல்களை பாடி கோவையை சேர்ந்த இசை ரசிகர்கள் அவருக்கு மூன்றாவது ஆண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்..
பாடல் பாடுவதில் ஆர்வமுடைய பல்வேறு துறை சார்ந்தவர்களுக்காக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மியூசிக் அண்ட் மோர் இசை ஸ்டுடியோவை நிறுவி நடத்தி வருகிறார் மகேஷ்.. இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி.யின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரை நினைவு கூறும் விதமாக தொடர்ந்து 12 மணி நேரம் பாடும் இசை நிகழ்ச்சியை அவரது ஸ்டுடியோவில் நடத்தினார்.
.காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை நடைபெற்ற இதில், கோவையை சேர்ந்த சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், குழந்தைகள்,ஆண்கள்,பெண்கள் வயதில் முதியவர்கள் கூட கலந்து கொண்டு பாடி அசத்தினர்..இதில் மருத்துவம், கணிணி துறை,சட்டம்,காவல்துறை என பல்வேறு துறை சார்ந்த, மேடைப்பாடகர்கள் அல்லாதவர்கள் கலந்து கொண்டு தங்களது அபிமான பாடல்களை பாடி மகிழ்ந்தனர்.
இது குறித்து இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களும், ஸ்டுடியோ மியூசிக் அண்ட் மோர் இயக்குனர்கள் மகேஷ் மற்றும் சரஸ்வதி ஆகியோர் கூறுகையில்,மருத்துவம்,சட்டம்,கல்வி,என பல்வேறு துறை சார்ந்தவர்களின்,பாடல் பாடும் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் ஸ்டுடியோவின் பங்குதாரர்கள் ரஜினிகாந்த்,பத்ம்பிரியா,ஆனந்த்,புவனா உட்பட பலர் கலந்து கொண்டனர்