அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பஞ்சாயத்து கொண்டையம்பட்டி கிராமத்தில் சிறு தானிய சாகுபடி நடைமுறைகள் குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது
இப்பயிற்சிக்கு அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப இயக்குனர் ராமசாமி, தலைமை வகித்தார் சிறுதானிய பயிர்கள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்து கூறினார்
இப்ப பயிற்சியில் ஓய்வு பெற்ற வேளாண்மை அலுவலர் மகாராஜன், சிறுதானிய பயிர் சாகுபடி முறைகள் சிறு தானிய பயிர்களின் வகைகள் சிறு தானியங்களின் உள்ள உணவு முக்கியத்துவம் சிறு தானிய பயிர்களின் பயிர் பாதுகாப்பு முறைகள் சிறுதானிய பயிர்களை மதிப்புக்குட்டி சந்தைப்படுத்துவது குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்து தொழில்நுட்ப உரைகள் ஆற்றினார்
மேலும் இப்ப பயிற்சியில் விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்கள் பற்றி அதன் பதிவிறக்கம் செய்தும் விவசாயிகள் கடன் அட்டை (KCC)அதன் பயன்கள் குறித்தும் உதவி வேளாண்மை அலுவலர் பால்பாண்டி விளக்கினார் இந்த பயிற்சியில் வேளாண்மை அலுவலர் வசந்தகுமார், உதவி வேளாண்மை, அலுவலர் பால்பாண்டி, உதவி தோட்டக்கலை அலுவலர் பேபிஷாலினி, ஆகியோர் கலந்து கொண்டனர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சௌந்தரராஜன், வசந்தி, ஆகியோர் செய்து இருந்தனர்.
40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் மாவட்ட அளவிலான பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப உரை வழங்கிய வல்லுநர்களுக்கும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேல்முருகன், நன்றி கூறினார்.