அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பஞ்சாயத்து அழகாபுரி கிராமத்தில் நடவுமுறை மற்றும் துவரை சாகுபடி குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது
இப்பயிற்சிக்கு அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்/ வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி தலைமை வகித்தார் நடவு முறை துவரை சாகுபடி குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்
இப்ப பயிற்சியில் ஓய்வு பெற்ற மேலாண்மை அலுவலர் மகாராஜன் விதை நேர்த்தி பாலித்தீன் பைகளில் துவரை விதைகளை வளர்த்து பின்னர் நடவு செய்தால் இயற்கை முறையில் உரம்மிடுதல் களை எடுத்தால் பூக்கும் தருணத்தில் 2சத டிஏபி கரைசல் தெளிப்பு முறைகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் நீர் மேலாண்மை முறைகள் அறுவடைக்கு பின்னர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் இநாம் முறையில் விற்பனை செய்வது குறித்து விவசாயிகளிடம் விளக்கம் கூறப்பட்டது
மேலும் இப்பயிற்சிக்கு விவசாயிகளுக்கு உழவர் செயலி பயன்கள் பயிற்சி அதனை பதிவிறக்கம் செய்தும் விவசாயிகள் கடன் அட்டை (KCC) அதன் பயன்கள் குறித்தும் உதவி வேளாண்மை அலுவலர் விக்னேஷ் விளக்கம் அளித்தார்
இப்ப பயிற்சியில் வேளாண்மை அலுவலர் வசந்தகுமார், உதவி வேளாண்மை அலுவலர் விக்னேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர் மாவட்ட அளவிலான பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தொழில் நுட்ப உரை வழங்கிய வல்லுனர்களுக்கும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேல்முருகன், நன்றி கூறினார் பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் செவுந்தரராஜன், வசந்தி, ஆகியோர் செய்திருந்தார்கள் இப்ப பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.