அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமக சார்பில் கோவில்பட்டி புதுக்கிராம பகுதியில் கொடியேற்று விழா நடைபெற்றது.
விழாவிற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாவட்டச் செயலாளர் எஸ். ஆர். பாஸ்கரன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். சமக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி முன்னிலை வகித்தார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் பேனா, பென்சில் மற்றும் பெண்களுக்கு குடங்கள் ஆகியவற்றை மாவட்ட செயலாளர் எஸ்ஆர்.பாஸ்கரன் வழங்கினார்.
இதில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் நகர அவைத் தலைவர் ஐயம்பெருமாள் , மாநில செயற்குழு உறுப்பினர் பூமி பாலகன், ஒன்றிய வர்த்தக அணி துணைச் செயலாளர் அய்யாதுரை,ஏழாவது வார்டு செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.