தென்காசி
பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் 88- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் தென்காசி அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோவிலில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயரில் சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் இனிப்புகள் வழங்கினர்
அப்போது தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் கூறும் போது 14 ஆம் நூற்றாண்டில் செண்பகப்பொழில் என்று அழைக்கப்பட்ட இடம் இப்போது அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் அமைந்த காரணத்தினால் தென்காசி என்று பெயர் பெற்று புகழ் பெற்று விளங்குகிறது
பராக்கிரம பாண்டியன் ஆட்சி காலத்தில் தென்காசி கோபுரம் 1456 ல் கட்டப்பட தொடங்கி குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் 1462 ல் கட்டி முடிக்கப்பட்டது
சிறிது காலத்தில் கோபுரமானது இயற்கை சீற்றத்தினால் சிதலடைந்து இடிந்து விழுந்தது சுமார் 220 ஆண்டுகள் இடிந்த கோபுரமாகவே இருந்தது இடிந்த
கோபுரத்தை பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் அவர்கள் 180 அடி உயரத்தில் ஒன்பது நிலைகளைக்
கொண்டு ராஜகோபுரமாக கட்டிக் கொடுத்தார்கள் ராஜகோபரமாக கட்டிக் கொடுத்த காரணத்தினால் கோபுர கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்ற பட்டத்தையும் சூட்டினார்கள்
சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் திருக்கோவில்களில் திருப்பணிகளை செய்து இருக்கிறார்கள் என்பதை யாரும் மறந்து விட முடியாது அப்படிப்பட்ட மாமனிதருடைய பிறந்தநாளில் அவருடைய புகழை போற்றுவதில் பெருமை கொள்கின்றோம் என்றார் .
இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சுப்பிரமணியன் மாநில துணைச் செயலாளர் டேவிட் நாடார் துணைச் செயலாளர் திருமலை குமார்பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் உடையார் சாம்பவர்வடகரை கிளை தலைவர் மோகன் பரமசிவன் இசக்கிமுத்து நாடார் முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்