மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் வடக்கு ஒன்றியம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தைகளின்
துணை அமைப்பாளர் தேன்பாக்கம் த.பா.குணசேகரன்
ஒருங்கிணைப்பில் முகாம் சீரமைப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக செங்கை தெற்கு மாவட்டச் செயலாளர் கவுன்சிலர் காஞ்சி மு.தமிழினி
கலந்துக்கொண்டு முகாம் சீரமைத்தல் குறித்து
ஆலோசணைகள் வழங்கினார்.
இதனை தொடர்ந்து தேன்பாக்கம் கிராமத்தில் பள்ளி
மாணவர்களின் சாலை பிரச்சனைகள் மக்கள் வீடுகளுக்கு அரசு பட்ட வழங்காமல் இருப்பது போன்றவற்றை கேட்டறிந்து மக்களின் தேவைகளை செய்யூர் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் எடுத்து செல்ல வேண்டி மனு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சித்தாமூர் வடக்கு ஒன்றியம்
இளஞ்சிறுத்தைகளின் துணை அமைப்பாளர்
த.பா.குணசேகரன் ஏற்பாட்டில் விளையாட்டு
வீரர்களுக்கு கிரிகெட் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சித்தாமூர் ஒன்றியம் நெற்குணம் கவுன்சிலர்
சிம்பு (எ) மோகன்ராஜ்,ஒன்றிய அமைப்பாளர்கள்
கன்னிமங்களம் ரஞ்சித்குமார்,சூ.கோ.வினோத்,
வீ.மகேந்திரன்,மற்றும் முகாம் பொறுப்பாளர்கள்
சுரேஷ், நீலகண்டன், சுபாஷ், திருக்குமரன், பரிமளா, கஸ்தூரி,சித்ரா, பானுமதி, வேலு, வெங்கடேஷ்,
மணிகண்டன், சந்திரசேகர், தயாளன், சக்திகுமார், பாபு , வி.பாபு,வேல்முருகன், ஐயப்பன்,சூரியா,
சேட்டு, ரஞ்சித், காண்டீபன்,மற்றும் இளைஞர்கள் மகளிர் என கி.கிராம பொதுமக்கள் பலர்
கலந்து கொண்டனர்.