பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் அருகே இலவச வீட்டுமனை பட்டா வேண்டி திருநங்கைகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை ……

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணலூர் மற்றும் கருப்பூர் பகுதியில் நீண்ட வருடங்களாக திருநங்கைகள் வாடகை வீடுகளிலும் நிரந்தர இருப்பிடம் இல்லாமல் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாடகை வீடுகளின் உரிமையாளர்கள் தங்களை திருநங்கைகள் என்று புறக்கணித்து வீட்டை விட்டு காலி செய்வதாகவும், வாழ்வாதாரம் இன்றி தங்களை மன உலைச்சலுக்கு ஆக்குவதாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் சமுதாயத்தில் ஒரு நிரந்திர அங்கீகாரம் இல்லாமல் நாங்கள் தவீப்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும் நாங்கள் மாவட்ட ஆட்சியரிடமும் வட்டாட்சியரிடமும், எங்களின் கோரிக்கை மனுவை பலமுறை அளித்துள்ளதாகவும், எங்களில் பலபேர் படித்த வர்களாகவும்இருப்பதால்…தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்து தாங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு நிரந்தர முகவரியை ஏற்படுத்தி தருமாறு திருநங்கை சுபஸ்ரீ தலைமையில் 10 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வட்டாட்சியர் அலுவலத்தில் கும்பகோணம் கோட்டாட்சியர்
பூர்ணிமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.