திருஷ்ணகிரி மாவட்டம்.காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம் அரசு மேல்நிலைப் பள்ளி, காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மாணவர் பேரணி நடத்தப்பட்டது. இப் பேரணியில் டெங்குக் காய்ச்சல் என்றால் என்ன? அது பரவும் முறைகள் ( மற்றும் அதணைத் தடுக்கும் முறைகள் குறித்து பள்ளித் தலைமையாசிரியர் முனைவர் க.பிரேம்குமார் அவர்கள் விளக்கமளித்து கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்.

இப் பேரணியை தேசிய பசுமைப் படை மற்றும் சுற்றும் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் . அ.செந்தில்குமார் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்.மு.செந்தில் ஆகியோர் வழி நடத்திட, பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் மா.நடராஜ். விழிப்புணர்வு வாசகங்களைக் கூற,மாணவச் செல்வங்களின் விண்முட்டும் வாசகங்களுடன் பேரணி தொடங்கியது. அனைத்து ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து அகரம் பகுதி முழுவதும், அனைத்து வீதிகளிலும் டெங்கு ஒழிப்புணர்வைப் பரப்பி, ‘நோயில்லா அகரத்தை’ உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாணவர் பேரணி இனிதே நிறைவுற்றது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *