பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.

பாபநாசம் அருகே அம்மாபேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்களை ஒன்றிய குழு தலைவர் திறப்பு வைத்தார்….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாபேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் அம்மாபேட்டை ஒன்றுக்குழு தலைவர் கலைச்செல்வன் கலந்துகொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார் ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சிவகுமார் துணைத்தலைவர் செந்தில்குமார் ஒப்பந்ததாரர் சண்.சரவணன் ,ஒன்றிய கவுன்சிலர்கள் மதுமதி மணிகண்டன், வெங்கட் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன் அமானுல்லா, ஊராட்சி செயலர் ஜெகத்குரு , புரவலர் மருது நடராஜன் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரிந்துகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *