தென்காசி மாவட்ம் ஆய்க்குடி அருகே அகரக்கட்டில் உள்ள தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் அலுவலகத்தில்உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழக்கமிட்ட தமிழர் தந்தை சிபா ஆதித்தனார் அவர்களுடைய 119 ஆவது பிறந்தநாள் புகழ் வணக்கம்

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் நடைபெற்றது

புகழ் வணக்கம் செலுத்தி ஆதித்தனார் புகழை எடுத்துரைத்த அகரக்கட்டு லூர்து நாடார் பேசும்போது;-

சிபா ஆதித்தனார் லண்டன் சென்று சட்டம் படித்தார் 1931இல் லண்டனில் மகாத்மா காந்தி கலந்து கொண்ட வட்டமேசை மாநாட்டின் செய்திகளை தமிழகத்தில் இருந்த சுதேசமித்திரன் பத்திரிக்கைக்கும் வெளிநாடுகளில் உள்ள பத்திரிகைகளுக்கும் செய்திகளையும் கட்டுரைகளையும் அனுப்பி மகாத்மா காந்தியிடம் பாராட்டை பெற்றவர்
19 33 ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்றார்

அதே ஆண்டிலேயே செப்டம்பர் 1ஆம் தேதி கோவிந்தம்மாள் அவர்களை சிங்கப்பூரிலே திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் மொழி மீதும் தமிழ் இன மக்கள் மீதும் பற்று கொண்ட ஆதித்தனார் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பினார் சுயமரியாதை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிட கட்சிகளினுடைய வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டார் சட்டமன்றத்தில் ஆதித்தனார் அவர்கள் சபாநாயகராக இருந்த சமயத்தில் தான் சட்டமன்ற விதிமுறைகள் அனைத்தும் தமிழாக்கம் செய்தார்.

சட்டமன்ற விதிமுறைகள் என்ற நூலை எழுதினார் ஆதித்தனார் இந்த நூலை அறிஞர் அண்ணா அவர்கள் வெளியிட்டார்கள் ஆதித்தனாரை பாராட்டிய அறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வந்து பாடம் நடத்துகின்றாள் என்றும் டாக்டர் கலைஞர் அவர்கள் பாராட்டும் போது சட்டசபையில் தமிழ் மனம் கமழ்கிறது தமிழ்த்தாய் புன்னகை பூக்கின்றாள் என்றும் புகழுரைத்தார்கள் சட்டமன்றத்தில் கணம் மந்திரி அவர்களே கணம் அங்கத்தினர் அவர்களே என்றுதான் முதலில் சொல்ல வேண்டும் இந்த வார்த்தைகளை மாற்றி மாண்புமிகு அமைச்சர் அவர்களே என்று அழைக்க செய்தவர் ஆதித்தனார் அவர்கள் ஆதித்தனார் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பனைமீது போடப்பட்ட வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் போராடினார் அவருடைய கோரிக்கையை ஏற்கப்படாத காரணத்தினால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு தொழிலாளர்களோடு சேர்ந்து பனைமீது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும் என்று போராடினார்கள் போராட்டம் தீவிரமடைவதை கண்ட அன்றைய அரசு பனை வரியை ரத்து செய்தது பனைத் தொழிலாளருக்காக சட்டமன்ற பதவியை துறந்தவர் சிபா ஆதித்தனார் என்பதை யாரும் மறந்து விட முடியாது அறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் முதலமைச்சராக ஆவதற்கு அனைத்து தகுதிகள் இருந்தும் அந்தப் பதவியை விரும்பாதவர் ஆதித்தனார் அவர்கள் தழிழர் தந்தை சிபா ஆதித்தனார் அவர்களுடைய 119 வது பிறந்த நாளில் வணங்கி மகிழ்கின்றோம் என்றார்கள்
இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் சுப்பிரமணியன் மாநில துணைச் செயலாளர் டேவிட் நாடார் மகளிர் அணி தலைவி சோனியா தர்ஷினி டெய்சி ராணி பிரேமா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *