கோவை
சங்ககிரியில் புதிய சாரதி மித்ரா பயிற்சி மையத்துடன் கேஸ்ட்ரோல் இந்தியா அதன் சாலை பாதுகாப்பு முன்முயற்சிகளை விரிவுபடுத்தியுள்ளது

இந்தியாவின் முன்னணி லூப்ரிகண்ட் உற்பத்தி நிறுவனமான கேஸ்ட்ரோல், தமிழ்நாட்டின் சங்ககிரியில் தனது சமீபத்திய கேஸ்ட்ரோல் சாரதி மித்ரா’ பயிற்சி மையத்தைத் திறந்து வைத்துள்ளதன் மூலம், இந்தியாவின் சாலைப் பாதுகாப்பு மற்றும் டிரக் ஓட்டுநர்களின் நல்வாழ்வுக்கான தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கேஸ்ட்ரோல் இந்தியா மற்றும் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கேஸ்ட்ரோல் சாரதி மித்ரா திட்டம், அதன் தொடக்கத்தில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான டிரக் டிரைவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது, இது ஓட்டுநர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.

2017 இல் தொடங்கப்பட்ட, ‘சாரதி மித்ரா’ முன்முயற்சியானது, பாதுகாப்பான, ஆரோக்கியமான, மற்றும் நிதி ரீதியாக நெகிழ்வான டிரக்கிங் சமூகத்திற்கான கேஸ்ட்ரோலின் இலக்கிற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது. டிரக் ஓட்டுநர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கு இந்த திட்டம் வலுவான முக்கியத்துவத்தை அளிக்கிறது, ஆரோக்கியமான உணவு தேர்வுகள் மற்றும் உடல் செயல்பாடுகளை நோக்கி அவர்களின் அணுகுமுறைகளை மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் இதன் மூலம் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.

கூடுதலாக, இந்த முன்முயற்சியானது டிஜிட்டல் நிதியியல் கல்வியறிவு மற்றும் திறன்களை வழங்குவதன் மூலம் ஓட்டுனர்களின் நிதி மேம்பாட்டிற்கு வழி வகுக்கிறது, இது ஓட்டுநர் நலனுக்கான அதன் முழுமையான அணுகுமுறைக்கு மற்றொரு சான்றாகும்.

புதிய மையத்தின் தொடக்கத்தின் மூலம், கேஸ்ட்ரால் இந்தியா இப்போது நாடு முழுவதும் எட்டு அதிநவீன பயிற்சி மையங்களைக் கொண்டுள்ளது. இவை, பாதுகாப்பான சாலைகளுக்கான பிராண்டின் பார்வையை பிரதிபலிக்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *