விஜய் மக்கள் இயக்கம் கோவை தெற்கு மாவட்டம் இளைஞரணி சார்பாக மீலாது விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு பிரியாணி மற்றும் நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது..

இஸ்லாமியர்களின் இறை துாதரான நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா மீலாது நபி விழாவாக அனைத்து பகுதியிலும்கொண்டாடப்படுகிறது..இந்நிலையில்,கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,மீலாது விழா, நடைபெற்றது.

இதில் மீலாது ஊர்வலத்தில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பிரியாணி மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதல் படி,நடைபெற்ற இதில்,தெற்கு மாவட்டம் இளைஞரணி தலைவர் பாபு தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில்,சிறப்பு அழைப்பாளராக விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கோவை விக்கி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் கிரீஷ், தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் பரத் மாவட்ட இணை செயலாளர்கள் உமாபதி, வினோத் பாலா, தெற்கு மாவட்ட இளைஞரணி பொருளாளர் ராஜா, துணை தலைவர் மாரிராஜ், துணை செயலாளர் ஆஷிக், இணை செயலாளர் அருண் குமார்,,சதீஷ் குமார் அமைப்பாளர் செந்தில் குமார் துணை , இனையதளஅணி பாலஜி ரோஹித் சரவணன் நிர்வாகி கௌதம், தெற்கு குறிச்சி பிரபு டேனியல் உட்பட மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *