கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 1800 பொற்கிழி வழங்கும் விழா
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா கிழக்கு மாவட்ட செயலாளர் தே. மதியழகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இவ்விழா உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி முன்னிலையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் 1800 நபர்களுக்கு வழங்கினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
தமிழகத்திலே பொற்கிழி வழங்கியதில் கிருஷ்ணகிரி மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளதாகவும், இதற்கு ஏற்பாடு செய்த மாவட்டச் செயலாளர் தே. மதியழகன் எம் எல் ஏ வை பாராட்டினார்.

மேலும் அமைச்சரான பிறகு முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்ததாகவும்,மூத்த முன்னோடிகளான நீங்கள் என்னுடைய தாத்தா பாட்டியாக கருதி பேரனாகிய என்னை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட இளைஞரணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது, கூட்டம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் டி.சி.ஆர் தினேஷ் ராஜன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சேலத்தில் நடக்க இருக்கும் இளைஞர் அணி மாநாட்டிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் தினேஷ் ராஜன் தலைமையில் 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், ஓசூர் மேயர் சத்யா, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், சுகவனம், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ்,பொது குழு உறுப்பினர்கள் ஏ. சி. நாகராஜ்,கிருபாகரன்,கழக பிரமுகர் பீ. டி. அன்பரசன், ஒன்றிய செயலாளர்கள் சாந்தமூர்த்தி, மூன்றம்பட்டி குமரேசன், எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், கே.ஆர்.கே நரசிம்மன், வசந்தரசு, அறிஞர், வி. ஜி. ராஜேந்திரன், ஆதி மகேந்திரன், தேங்காய் சுப்பிரமணி,இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், சங்கர், சரவணன், லயோலா ராஜசேகர், சங்கர், சத்தியமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பாலாஜி, நெசவாளர் அணி அமைப்பாளர் அம்மன் ராஜா, விவசாய அணி அமைப்பாளர் இளையராஜா, துணை அமைப்பாளர் காமராஜ், மீனவர் அணி துணை அமைப்பாளர் தெய்வம், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சண்முகம், ராஜ்குமார், மகளிர் அணி சின்னத்தாய் கமலநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதவி முருகேசன், அறிவொளி ராமமூர்த்தி, விமலா மணி, பேரூராட்சி துணைத் தலைவர் தீபக், பேரூராட்சி கவுன்சிலர்கள் சுமித்ரா தவமணி, கனகஸ்வரி,
பாளேத்தோட்டம் தினகரன்,உள்ளிட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *