உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம்:-

உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம்;-
மண்டல இணை இயக்குநர் தியோபிலஸ் ரோஜர் அறிவுரைப்படி உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இலவச வெறிநோய் (ரேபீஸ்) தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெட்டூர், மாறந்தை, புதுப்பட்டி, மருதம்புத்தூர், வெண்ணிலிங்கபுரம், ஊத்துமலை, கீழக்கலங்கல், வீராணம், ஆலங்குளம் ஆகிய கால்நடை மருந்தகங்களில் தடுப்பூசி முகாம் தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்றது.

தென்காசி கோட்ட உதவி இயக்குநர் டாக்டர்.மகேஷ்வரி :- கூறியதாவது;-

வெறிநோய் (வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் நோய் ‘ரேபிஸ்’) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களை பாதுகாக்க ஆண்டுதோறும் செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறிநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, 17-வது உலக வெறிநோய் தினமான ‘ஆல் ஃபார் ஒன், ஒன் ஹெல்த் ஃபார் ஆல்’ என்ற கருத்தின் அடிப்படையில், அனைத்து துறைகளும் இணைந்து 2030-ஆம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடைபிடிக் கப்படுகிறது.

உலகில் 150 நாடுகளுக்கு மேல் வெறிநோய் பாதிப்புக்கு ஆளாகி ஆண்டுதோறும் 60 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர். இதில் 95 சதவீதம் இறப்பு ஆப்பிரிக்கா, ஆசியாவில் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் 9 நிமிடத்துக்கு ஒருவர் வெறிநோயால் இறப்பதாக உலக சுகாதார நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.

நெட்டூரில் கால்நடை மருத்துவர் ராமசெல்வம், உதவியாளர் கீதா மற்றும் செல்லப்பிராணிகள் வளர்க்கும் பொதுமக்கள் வெறிநோய் தடுப்பு தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *