ஆலங்குளத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பல்நோக்கு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆலங்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர் மங்கள நாயகி தலைமை தாங்கினார்.

மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன்,
துணை சேர்மன் செல்வக்கொடி ராஜாமணி, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் முத்துலெட்சுமி அன்பழகன், பள்ளி சிறார் மருத்துவர் சித்ரா, நெட்டூர் வட்டாரசுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன், புள்ளியல் ஆய்வாளர் சண்முக சுந்தரம், உணவு பாதுகாப்பு அலுவலர் மகாராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் கர்ப்பிணிகளுக்கு சந்தனம் பூசி கும்குமம் வைத்து மாலை வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. சேலை, பிளவுஸ் பழங்கள் சத்துமாவு அடங்கிய சீர் வரிசைகள் வழங்கப்பட்டது. 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டது.
இதில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 120 கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.

அங்கன்வாடி பணியாளர்கள் ஒயிலாட்டம் கும்மியாட்டம் நடனமாடி கர்ப்பிணிகளை மகிழ்வித்தனர். விழாவில் பங்கேற்றவர்கள் அர்சதை தூவி கர்ப்பிணிகளுக்கு ஆசி வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *