ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் சார்பில் ரூ.25 லட்சத்தில் சுண்டகாமுத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு புற நோயாளிகளுக்கான புதிய கட்டிடம் துவக்கம்

கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் சுண்டகாமுத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, நிறுவன சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக ஒரு புதிய புற நோயாளிகள் பிளாக்கை கட்டி நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி இன்று நோயாளிகளுக்கான புதிய வெளிநோயாளர் பிரிவு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் நோயாளிகள் காத்திருப்பு கூடம், மருத்துவர் அறை, நோயாளிகள் பரிசோதிக்கும் அறை, மருந்தகம் மற்றும் இரண்டு ஆலோசனை அறைகள் என ஆறு அறைகள் கொண்ட இந்த கட்டிடம் 25 லட்சம் செலவில் கட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோவை சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மீரா.எஸ் தலைமை ஏற்று, வரவேற்புரை வழங்கினார். இதில் இவர் பேசுகையில் அரசு மருத்துவமனைக்கு இந்த கட்டிடத்தை கட்டி கொடுத்தமைக்கு நன்றி கூறினார். மேலும் இது போன்ற சேவைகளை இக்கல்வி நிறுவனம் வழங்குவதை பாராட்டினார். அரசு மருத்துவமனைக்கு பல தேவைகள் உள்ளன. இவைகளை நிறுவன சமூகப் பொறுப்பில் வழங்கினால் ஏழை நோயாளிகளுக்கு மிகவும் நன்கு பயனடையும் என்று கூறினார்.

மேலும் இந்த நோயாளிகளின் பிரிவினை தொடங்கிவைத்து ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்,மலர்விழி பேசுகையில் கல்வி நிறுவனங்கள் அரசின் மருத்துவமனைக்கு உதவி ஏழை நோயாளிகள் பயனடைய சேவை செய்ய வேண்டும். மாணவர்களை இச் சேவைக்காக ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும். சமூக சேவைகளில் நாம் அனைவரும் ஈடுபட்டு மக்கள் பயனடைய வேண்டும் எனக் கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்கள் சமுதாய நலனுக்காக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக எஸ்.மலர்விழி ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, கைதிகள் குழந்தைகளுக்கு கல்வி உதவி, அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பல்வேறு உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், முதியோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் இல்லங்களில் உதவுதல், மரக்கன்றுகள் நடுதல், சாலைகளின் ஓரம் மரம் நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் கே.ஆதித்யா, கோவை சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மீரா.எஸ், கோவை குடும்ப நலத்துறை இணை இயக்குநர் டாக்டர் கவுரி, மேட்டுப்பாளையம் ஜி.எச்., டாக்டர்.சித்ரா, சுண்டகாமுத்தூர், தலைமை மருத்துவ அதிகாரி,வினோத் சுகுமார், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *