பெருமாளுக்கு 20 கிலோவில் லவங்கம் மாலை

புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் அதிகாலை முதலே பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்

திருவொற்றியூரில் காலடிப்பேட்டையில் மிகவும் பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மூலவர் கல்யாண வரதராஜ பெருமாளுக்கு வெண்பட்டாடை உடுத்தி ராஜ அலங்காரம் செய்யப்பட்டு ஏழு நிறங்களில் விஷேச புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
இதனையடுத்து உத்சவர் பவழ வண்ண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி தாயார் ஆண்டாள் நாச்சியாருக்கு 20 கிலோ எடையிலானா வாசனை நிறைந்த ,லவங்கம் மற்றும் அலங்கார பொருட்கள் கொண்டு தயாரிக்க பட்ட மாலை ஜடை ,கிரீடங்கள் அணிவித்து பிரமாண்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் பக்தியுடன் பெருமாளை வழிப்பட்டனர் இத்திருக்கோவிலில் புரட்டாசி மாதம் நான்கு வாரங்களும் விதவிதமான மலர்கள் பழங்கள் என மாலை அணிவித்து பெருமாளுக்கு அலங்காரம் செய்வதனால் வெளிபகுதிகளில் இருந்து எராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *