ஈரோடு மாவட்டம் பவானி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சரும், பவானி எம்எல்ஏவுமான கருப்பணன் தலைமையிலும், நகர செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், ஒன்றிய செயலாளர் தங்கவேலு பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், எம்.ஜி.நாத் (எ) மாதையன், பெரியசாமி, கூடுதுறை சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.