சகாதேவன் போச்சம்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டம் கிழக்கு காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை கோட்டப்பட்டி ஊராட்சி உட்பட்ட மாத கவுண்டனூர் கிராமத்தில் பாஜகவின் கொடி கம்பத்தை சில சமூக விரோதிகளால் கடப்பாரையின் மூலமாக அகற்ற முயற்சித்தனர்

அன்றைய தினமே பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் சேர்ந்து அதே இடத்தில் கட்சி கொடியினை ஏற்றினர் பிறகு சமூக விரோதிகளின் மீது காவல்துறையில் நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளிக்கப்பட்டது

டிசம்பர் 27 தேதி அன்று வட்டாட்சியர் 30க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரியின் மற்றும் கிராம நிர்வாகி ஆர் ஐ முன்னிலையில் மாற்ற கட்சி கொடி கம்பம் அருகில் இருந்த போதும் பாரதிய ஜனதா கட்சிக்கு கொடிக்கம்பத்தை மட்டும் ஒரு தலை பட்சமாக தாசில்தார் கிராம நிர்வாகி உதவியாளரின் உறுதுணையுடன் அகற்றப்பட்டது

இந் நிகழ்வில் தாசில்தார் அவர்கள் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் கூறிய நிலையில் தற்போது வரை மாற்ற கட்சி கொடிகளை அகற்றப்படவில்லை ஒருதலை பட்சமாக தாசில்தார் செயல்படுகிறார்

என பாஜக குற்றம் சாட்டுகின்றனர் வட்டாட்சியர் அவர்களை சந்தித்து டிசம்பர் 28 தேதி அன்று வட்டாட்சியரை சந்தித்து மாவட்ட தலைவர் KSG சிவப்பிரகாசம் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் வெங்கடாஜலபதி மாவட்ட பொருளாளர் கவியரசு காவேரிப்பட்டணம் கிழக்கு மண்டல் தலைவர் சாமிநாதன் பர்கூர் தெற்கு மண்டல தலைவர் ரமேஷ் முன்னிலையில் வட்டாட்சியரை சந்தித்து மாற்றுக் கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டது

பாஜகவின் கட்சி கொடிகளை அகற்றிய நிலம் பொறம்போக்கு சொந்தமானது நிலத்தை அளவை செய்யாமல் அகற்றியதற்கு காரணத்தை கேள்வியாக எழுப்பப்பட்டது

பாஜக சார்பாக கொடுக்கப்பட்ட புகார் மனுவின் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் புகார் மனுவை விரைவாக விசாரிக்கவில்லை எனில் மாநில தலைமை படி பாஜக சார்பில் மிகப்பெரிய அளவில் போச்சம்பள்ளி நகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை பாஜக சார்பாக அறிவிக்கும் என தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *