பனை பாதுகாப்பு அரசிதழில் வெளியிட வேண்டும்
பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி வட்டம், குன்னலூர் கீழச்சேத்தி பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பூமிநாதன் தமிழ் நாட்டின் மாநில மரம் பனையை மாவட்ட ஆட்சியரின் அனுமதிப் பெறாமல் வெட்டி வீழ்த்தியிருக்கிறார்
_இதுகுறித்து எடையூர் காவல்நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் பார்த்தீபன் புகார் மனு அளித்து விசாரனை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது

_திருத்துறைப்பூண்டி வட்டத்தில் தொடர் நிகழ்வாக பனையை அழித்தொழிக்க முற்படும் நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா வேதனையோடு தெரிவிக்கிறார்

_பனையை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதிப்பெற வேண்டும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையின் போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையை அரசிதழில் வெளியிட. ஆவண செய்யவேண்டுமென பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் வைக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *