பா.வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.
இந்த சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி மண்பானைகளில் பச்சரிசி சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் வைத்து, அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடினார்கள்.
பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்ட பானை உடைத்தல் போட்டிகள், மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், சுருள் வீச்சு நிகழ்ச்சிகள், இசை நாற்காலி விளையாட்டுப் போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் பங்குபெற்று வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும், தப்பாட்டம், கும்மிப்பாட்டு ஆகிய கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அலுவலர்களின் குழந்தைகள் மற்றும் அலுவலர்கள் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை சுற்றிவந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.