குடவாசல் அருகே உள்ள அரசவனங்காடு கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மந்தை கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அரசவனங்காடு கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மந்தை கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்துக்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையானது தமிழர் திருநாளாக நாடு முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் இந்தப் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்காக மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உழவர்கள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு பொங்கலிட்டு படைக்கும் இந்த நாளை ஒட்டி, நேற்று தாங்கள் வளர்த்து வரும் மாடுகள், ஆடுகள் மற்றும் காளைகளை நேற்று காலையிலேயே குளிப்பாட்டி சந்தனம் மற்றும் மஞ்சள் போட்டு வைத்ததுடன், அதன் கழுத்திற்கு புதிய கயிறு, மாலைகள் மற்றும் மணிகளைக் கட்டி அழகு பார்த்தனர்.
மேலும் கால்நடைகளுக்கு என தனியாக பொங்கலிட்டு அதனை சூரிய பகவானுக்கு படைத்து பின்ன மாடுகளுக்கும் வழங்கினர். மேலும் கிராமங்களில் முதல் மாடு மேள தாளத்தோடு அழைத்து வந்து ஒரு இடத்தில் மங்கை கூறும் நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம், அதன்படி அரசவனங் காடு கிராமத்தில் நாகராஜன் என்பவர் வளர்த்து வரும் பசு மாடு முதல் மாடாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மந்தை கூறும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற்றது.