மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியை மாநில கணக்காயர் அலுவலகத்தில் செலுத்துவது எப்போது ?
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டச் செயலாளர் அறிக்கை….
மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக மாநில கணக்காயர் அலுவலகத்தின் மூலம் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு 27.10.2023-ல் ரூ20,05,52,815-ல் இரண்டு தவணைகளில் முறையே ரூ10,21,89,958 மற்றும் ரூ 5,48,56,349 மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு வருங்கால வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது போக மீதமுள்ள வருங்கால வைப்பு நிதி தொகையையும், ரூ 20,05,52,815-க்கு 1.4.2019 முதல் 31.1.2023 முடிய உரிய அரசாணைகளின் படி வட்டி தொகையையும், ரூ 9,73,62,857-க்கு 1.2.2023 முதல் 31.8.2023 முடிய, உரிய அரசாணைகளின் படி வட்டித் தொகையை யும், 1.9.2023 முதல் இன்று வரை மீதமுள்ள வருங்கால வைப்பு நிதிக்காக உரிய அரசாணைகளின் படி வட்டி தொகைக்காக மாநில கணக்காயர் அலுவலகத்தில் செலுத்த வேண்டிய வட்டித்தொகையை
யும் சேர்த்து சுமார் ரூ 6.39 கோடியை வட்டிக்கான தொகையாகவும் வருங்கால வைப்பு நிதியில் இரண்டு தவணைகளில் செலுத்தியது போக மீதமுள்ள வருங்கால வைப்பு நிதி தொகையையும் 2024 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள்ளாக மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு விரைந்து செலுத்திட அறிவுறுத்தப்பட்டு கடிதம் அனுப்பப் பட்டிருந்த நிலையில், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் மதுரை மாவட்டச்செயலாளர்
சீனிவாசன் பெயரில் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு, 25.10.2023 மற்றும் 20.11.2023 ஆகிய தேதிகளில் நிலுவையில் உள்ள வருங்கால வைப்பு நிதி தொகையை செலுத்துவதற்கும், வருங்கால வைப்பு நிதிக்கு வட்டித் தொகையான சுமார் ரூ 6.39 கோடியை விரைந்து மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு செலுத்திட வேண்டியும் கோரிக்கை விண்ணப்பம் மின்னஞ்சலிலும் பதிவு தபாலிலும் அனுப்பியும் நாளது தேதி வரை மதுரை மாநகராட்சி ஆணையரால் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் விரைந்து போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டச் செயலாளர்
சீனிவாசன் தெரிவித்துள்ளார்.