கண்ணாடி குளத்தில் மகளிர் சுகாதார வளாகம், சமுதாயநல கூடம், மற்றும் கலையரங்கம் திறப்பு விழா;-

தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கண்ணாடி குளத்தில் ரூ 20 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் சமுதாய நல கூடம் மற்றும் கலையரங்கம்
திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் ஆர்பி முருகன் தலைமையில் நடைப் பெற்றது

ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர்
எம் திவ்யா மணிகண்டன் முன்னிலை வைத்தார்

ஆலங்குளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம் பி எம் அன்பழகன் வரவேற்று பேசினார்.

முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் வழகறிஞர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுசீவலபுரம் கரடியுடைப்பு கிராமம்
கண்ணாடி குளத்தில் ரூ 20 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் சமுதாய நல கூடம் மற்றும் கலையரங்கத்தை திறந்து வைத்தும் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றியும் அரசின் சாதனைகள் பற்றியும் விளக்கி பேசினார்.

நிகழ்ச்சியில் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கச் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரசேகர், பாலசுப்பிரமணியன் ,ராம்குமார், செல்வராஜ் ,
ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், முருகேசன், முருகேஸ்வரி பாலகுமார் , மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஐயம்பெருமாள், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணபதி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தட்ட பாறை சுப்பிரமணியன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் வாடியூர் மரியராஜ், மாவட்ட தொண்டரணி தலைவர் வெங்கடேசன், மாவட்ட பிரதி ஸ்டீபன் சத்யராஜ் , அன்பழகன், சுரண்டை இளைஞரணி முல்லை கண்ணன், வழக்கறிஞர்கள் ஹரி சபரிகார்த்திக், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் விஜயராஜ், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நாகூர் ஹனி, மருக்காளங்குளம் முருகையா, நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன், விவசாயி துணை அமைப்பாளர் சின்ன கோவிலாங்குளம் திருமலைகுமார் , ஆலங்குளம் சோனா மகேஷ் ,மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

முடிவில் ஊர் நாட்டாமை முருகன் கிளைக் கழகச் செயலாளர் மாடசாமி ஆகியோர் நன்றி கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *