தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு மடத்தூரில் முன்னாள் முதல்வர் எம் ஜீ.ஆரின் 107 -வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் எம் ஜீ.ஆர் திருவருவ சிலைக்கு திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டம்அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சந்திரசேகர். தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் கடையம் ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகசாமி. தெற்கு முத்துகிருஷ்ணன். வடக்கு ஆழ்வார் குறிச்சி நகரச் செயலாளர் அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மடத்தூர் ஊராட்சி செயலாளர் கில்லி சுந்தர் வரவேற்றார் சிறப்பு விருந்தினராக மாவட்ட இணைச் செயலாளர் கலா பத்மபாலா கலந்து கொண்டு எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் குருவை முருகன், ஆலங்குளம் நகரச் செயலாளர் சுப்பையா, போக்குவரத்து பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பத்திரகாளி,மாவட்ட மாணவர் அணி முத்துராமன். மாவட்ட சிறுபான்மை பிரிவு ஜோசப் செல்வகுமார். மாவட்ட மாற்றுத்திறனாளி சங்கர் மேல ஆம்பூர். ஊராட்சி செயலாளர் மோகன்.கீழப்பாவூர் நவநீதகிருஷ்ணன். வெங்கடாபட்டி ஊராட்சி செயலாளர் செல்லத்துரை. குழந்தை வேலு. மங்கா சுப்பையா. நாகல்குளம் . மீனாட்சி சுந்தரம் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர் .
முடிவில் தெற்கு மடத்துர் கிளை செயலாளர் சந்திரன் நன்றி கூறினார் .