தெற்காசி மாவட்டம்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் சீவலபுரம் தட்டப்பாறை கிராமத்தில் டாக்டர் அப்துல் கலாம் ஊரக வளர்ச்சி மற்றும் நல உதவிக்குழு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அக் குழுவின் தலைவர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது
விழா ஒருங்கிணைப் பாளர் தலைமை காவலர் சத்திய மூர்த்தி, லட்சுமண பாண்டியன், முருகையா, உதயகுமார், நெல்லை கிருஷ்ணகுமார்
காசி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழா ஒருங்கிணைப்பாளர் எஸ்ஐ செந்தூர் பாண்டியன்வரவேற்றார் சிறப்பு விருந்தினர்களாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி பொற்ச்செழியன்,
ஊத்துமலை உதவி காவல் ஆய்வாளர் முத்துப் பாண்டி, முன்னாள் கூட்டுற வு வங்கி பணியாளர் கள் சங்க மாநில செயலாளர்
முத்துப்பாண்டியன், ஆசிரியர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு தட்டாப் பாறை கிராமத்திலுள்ள
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி க்கு ஸ்மார்ட் டிவிமற்றும் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் ஆகியவற் றை வழங்கினர்.
தொடர்ந் து அந்த கிராமத்தை சேர்ந்த காவியா என்ற பத்தாம் வகுப்பு மாணவி ஒரிசா மாநிலத்தில் தேசிய அளவில் நடந்த கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு ஐந்து போட்டியில் 12 கோல் அடித்து தமிழக அணி வெற்றி பெற காராணமான அவரை பாராட்டி பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது விழாவில்துபாய் செல்ல பாண்டியன், காவலர் மகேந்திரன், பெங்களூர் இளவரசன்,
ராணுவவீரர் மன்மத ராஜா,பாலகிருஷ்ணன் பால்ராஜ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் அரசு விரைவு போக்குவரத்து கழக சின்ன பாண்டியன் நன்றி கூறினார்.