பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் 108-சிவாலயம் கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்டு வழிபாடு செய்த, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராமபக்தர்கள்..
சிறப்பான வரவேற்பு அளித்த பாஜகவினர்..

மத்திய பிரதேசத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட ராமபக்தர்கள் வாகனங்கள் மூலம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு ஸ்ரீராமர் புகழை பறைசாற்றும் வகையில் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீராமர் இலங்கையில் இருந்து அயோத்திக்கு செல்லும்போது வழிபட்ட தலமான, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள 108 சிவாலயத்திற்க்கு ராமபக்தர்கள் வருகை புரிந்து சிவனை வழிபட்டு, ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கங்கள் விண்ணை பிளக்க கோஷங்கள் இட்டவாறு, பஜனை பாடல்கள் பாடி தரிசனத்தில் ஈடுபட்டனர். அப்போது 108 சிவாலயத்திற்கு வருகை புரிந்த ராம பக்தர்களை தஞ்சை மாவட்ட பாஜகவினர் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து அனைவருக்கும் உணவு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.