மதுரை, திருநகர் புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலய திருவிழா….
மதுரை, திருநகரில் அமைந்துள்ள புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தில் அருட்பணி ஜார்ஜ் எட்வின் அடிகளார் தலைமையில் புனித வின்சென்ட் பல்லோட்டியாரின் பங்கின் திருவிழாவானது கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஒன்பது நாட்கள் நவநாள் திருப்பலிகள், புனித பல்லோட்டியாரின் உருவசிலை திறப்பு, நற்கருணை பவனி, தேர்பவனியுடன் அன்பின் விருந்தும் வழங்கப்பட்டது.
திருவிழா நிறைவுநாள் திருப்பலியில் பல்லோட்டி சபையின் ஆரோக்கிய அன்னை மறைமாநில அதிபர் பேரருட்தந்தை இம்மானுவேல் தலைமையில் குழந்தைகளுக்கு முதல் திருவிருந்து(புதுநன்மை) வழங்கப்பட்டு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
இத்திருவிழா திருப்பலியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையாசீர் பெற்றனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பல்லோட்டி ஆலய பங்குத்தந்தை ஜார்ஜ் எட்வின் மற்றும் இறை மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்,