எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி.
சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் 21.81 கோடி மதிப்பீட்டில் மேற்கூறையுடன் கூடிய.நவீன நெல் சேமிப்பு தளங்களை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த எடமணல் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கு இங்கு இயங்கி வருகிறது இந்த சேமிப்பு கிடங்கில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் முட்டைகளை திறந்தவெளியில் அடுக்கி வைத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ரூபாய் 31.25 கோடி மதிப்பீட்டில் 25,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்களை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

இந்நிலையில் முதற்கட்டமாக 9 சேமிப்பு தளங்கள் ரூபாய் 9.43 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ரூபாய் 21.81 கோடி மதிப்பீட்டில் 16 நவீன நெல் சேமிப்பு தளங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
எடமணல் நுகர் பொருள் வாணிப கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் .பன்னீர்செல்வம், மற்றும் நுகர் பொருள் வானிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, செயற்பொறியாளர் குணசீலன், உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் (கட்டுமானம்) ஆனந்தகுமார், உதவி செயற்பொறியாளர் (மின்னியல்) பைங்குழலி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். விழாவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.