பாபநாசம் செய்தியாளர்
ஆரே.தீனதயாளன்
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு..
கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ பூமி நீலா பெருந்தேவி சமேத வரதராஜன் பெருமாள் ஆலயத்தில் ராமர் பதாகைகள் மற்றும் கொடிகளுடன் பக்தர்கள் வீதி வலம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, கணபதி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூமி நீலா பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் ஆலயத்தில், அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்கள் ராமர் பதாகைகளுடன், கைகளில் கொடிகளை ஏந்திய வண்ணம், ராமர் பஜனை கோஷங்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து ராம பக்தர்கள் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கும்பாபிஷேகத்தை கொண்டாடினர்.