பாபநாம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு..
பாபநாசம் அருகே நல்லிச்சேரி ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் அஷ்டலட்சுமி பூஜைகளுடன், 1008 திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் சுவாமி வழிபாடு..

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அமைந்துள்ள நல்லிச்சேரி ராஜகோபாலசாமி திருக்கோயில், அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் பிரதிஷ்டை செய்வதை முன்னிட்டு உலக பொதுமக்கள் நன்மை வேண்டியும், விவசாயிகளின் வளன் பெருக வேண்டி அஷ்டலட்சுமி பூஜைகள் நடத்தப்பட்டன.

மேலும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு கோயிலின் உள்ளே 1008 திருவிளக்கு ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து பசு மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட அட்சதை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.