தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன்வெளியிட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பெற்றுக் கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 646,907 ஆண் வாக்காளர்களும் 674,616 பெண் வாக்காளர்களும், 156 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 1321679 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு துரை இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஷேக் அப்துல்காதர், துணை ஆட்சியர் (பயிற்சி) கவிதா மாவட்ட வழங்கல் அலுவலர் அணிதா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, வட்டாட்சியர் (தேர்தல்) ஹென்றி பீட்டர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.