சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடி திருவுருவ சிலைக்கு அடிக்கல் விழா
தென்காசி ;-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தென்காசி மாவட்டம், நெற்கட்டும் செவலில் ரூ.50 இலட்சம் மதிப்பிலான சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடி திருவுருவ சிலைக்கு அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து நெற்கட்டும் செவலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன்ஆகியோர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.