சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பட்ரவாக்கம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் செல்லும் ரயில் பெட்டிகளில் அரிசி மூட்டைகள் கடத்தப்படுகிறதா என கொருக்குப்பேட்டை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் தலைமையில் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்
அப்பொழுது நடைமேடை பகுதியில் ரயில் பயணிகள் அமரும் இடத்தில் கீழே 25 மூட்டை அரிசி மூட்டைகள் அடுக்கி வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது
25 கிலோ மதிப்பில் 10 மூட்டைகள் 250 கிலோ அரிசி கேட்பாரற்று கிடந்ததால் அவற்றை கொருக்குப்பேட்டை போலீசார் பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்