அலங்காநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சியில் சமுதாயக்கூடம் மராமத்து பணிகள் முடிந்து சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சி இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பு நிதியில்(0&M)
2012 – 2023 வார்டு 10ல் சமுதாய கூடத்தின் கட்டுமான பணிகள் ரூபாய் 34,40 லட்சம் செலவில் அபிவிருத்தி திட்டத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜூலான்பானு, துணைத் தலைவர் சுவாமிநாதன், வார்டுகவுன்சிலர் சர்மிளாசுந்தர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கட்டிடத்தினை சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். அருகில் திமுக மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், நகர
செயலாளர்கள்
ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், ஒன்றிய அவைத் தலைவர் இடையபட்டி நடராஜன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சுஅழகு, துணைத் தலைவர் சங்கீதா, மணிமாறன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்…