வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம், பெருங்குடி ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்ட பணிகளை திருவாரூர் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில், மத்திய, மாநில அரசு நிதிகள் மூலம் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஊராட்சியில் 2023-2024 ஆம் நிதியாண்டில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை திருவாரூர் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரியங்கா ஆய்வு மேற்கொண்டார், பள்ளி புனரமைப்பு திட்டத்தின் கீழ் சந்திரசேகரபுரம் ஊராட்சியில் 3.74 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டிடம் மற்றும் கழிவறை பழுதுபார்த்தல் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
அவருடன் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ ஊ) வி. சுப்புலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ)ஜெ. பிரகாஷ், ஒன்றிய பொறியாளர் ஷர்மிளா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கே சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேம்பு, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியை அ. சத்தியசீலா, ஆசிரியர் அ. விஜய பூபாலன் ஆகியோர் உடன் இருந்தனர். இதை அடுத்து ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் கிராம நிர்வாக அலுவலருக்கான சுகாதார வளாகம் கட்டுமான பணிகளையும், மாவட்ட ஊராட்சி குழு நிதியில் மூலம் போடப்பட்டுள்ள தார் சாலை பணியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விருப்பாச்சிபுரம் ஊராட் சியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூபாய் 16. 47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பின்னர் சுள்ளான் ஆற்றில் பாதிரிபுரம் மற்றும் சின்னகரம் ஆகியவற்றை இணைக்கும் விதமாக பாலம் கட்டப்பட உள்ள இடத்தை பார்வையிட்டார்.
அதனை அடுத்து கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் உள்ள சுள்ளான் ஆற்றுப் பாலத்தில் இருந்து வேதாம்பரை வரை செல்லக்கூடிய 2,872 மீட்டர் நீலத்திற்கு, ரூபாய் 92 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பெருங்குடி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, பிரகாஷ், ஒன்றிய பொறியாளர் சர்மிளா, தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.